/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துார் வாரப்படாத அமராவதி வாய்க்கால் பாசன தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
/
துார் வாரப்படாத அமராவதி வாய்க்கால் பாசன தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
துார் வாரப்படாத அமராவதி வாய்க்கால் பாசன தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
துார் வாரப்படாத அமராவதி வாய்க்கால் பாசன தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
ADDED : அக் 22, 2025 01:13 AM
கரூர், கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளில் பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன்மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. இதில், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசு காலனி, சணப்பிரட்டி ஆகிய பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜ வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.
இதில் அமராவதி பாசன வாய்க்கால், சணப்பிரட்டியில் இருந்து வீரராக்கியம், மேலமாயனூர், மணவாசி, ரங்கநாதபுரம், கட்டளை வழியாக கும்பக்குழி உள்ள காவிரி பாசன வாய்க்காலில் கலக்கிறது. இந்த பாசன வாய்க்கால் மூலம் சாகுபடி நடந்து வருகிறது. இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் வாய்க்கால் பாதையே தெரியாத நிலை உள்ளது.
உள்ளாட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை எந்த சுத்தகரிப்பும் செய்யாமல், நேரடியாக வாய்க்காலில் திறந்து விடுகின்றனர். கழிவுநீர் கலந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பாய்வதால், அவை மலட்டு தன்மை கொண்ட நிலமாக மாறி வருகிறது. இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.