/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராசிபுரம் ஆயா கோவில் விழா கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்
/
ராசிபுரம் ஆயா கோவில் விழா கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்
ராசிபுரம் ஆயா கோவில் விழா கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்
ராசிபுரம் ஆயா கோவில் விழா கடைகள் ஏலம் விடுவதில் சிக்கல்
ADDED : அக் 19, 2025 02:57 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆயா கோவில் விழா கடைகளை ஏலம் விடு-வதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் ஒன்றியம், கூனவேலம்பட்டி புதுாரில் ஆயா கோவில் என்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. தீபாவளிக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை கோவில் திருவிழா, இரண்டு நாட்கள் நடக்கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்து பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
விழாவையொட்டி கோவில் மைதானத்தில், சாலைகளில் கடைகள் அமைப்பது வழக்கம். அதில் பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், தின்பண்ட கடைகள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படும். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மொத்தமாக டெண்டர் விடுவது வழக்கம்.
இந்நிலையில், கோவிலில் கடைகளுக்கான டெண்டர் விட அறி-விக்கை செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சம்பந்தப்-பட்ட இடத்தில், அறங்காவலர் துறையினர் கடைகளை நடத்த ஏலம் விடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பால் யாரும் ஏலம் கோர வரவில்லை. இதனால் ஆயாக்கோவில் கடை-களுக்கு, ஏலம் விடாமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகா-ரிகள் திரும்பிச் சென்றனர்.