/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
/
மாநில அளவிலான கால்பந்து ஈசநத்தம் அரசு பள்ளி தகுதி
ADDED : அக் 19, 2025 02:57 AM
அரவக்குறிச்சி: ஈசநத்தம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர், மாநில அளவி-லான கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர்.
கரூர் வருவாய் மாவட்ட அளவில், மாணவியருக்கான கால்பந்-தாட்ட போட்டி, கரூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்-பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. 19 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான கால்பந்தாட்ட அரையிறுதி போட்டியில் ஈச-நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்-றது. பின்னர், இறுதி போட்டியில் ராணி மெய்யம்மை மேல்நி-லைப்பள்ளியுடன் மோதி, 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.