ADDED : நவ 17, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொருட்கள்
குறித்த விழிப்புணர்வு
கிருஷ்ணராயபுரம், நவ. 17-
கிருஷ்ணராயபுரம், அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் போதை பொருட்கள் பயன்படுத்தினால், அதன் தீமைகள் குறித்து விளக்கி, தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆசிரியர்கள், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.