/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுற்றுச்சூழல் துறை சார்பில் கலை பொருட்கள் தயாரிப்பு
/
சுற்றுச்சூழல் துறை சார்பில் கலை பொருட்கள் தயாரிப்பு
சுற்றுச்சூழல் துறை சார்பில் கலை பொருட்கள் தயாரிப்பு
சுற்றுச்சூழல் துறை சார்பில் கலை பொருட்கள் தயாரிப்பு
ADDED : பிப் 13, 2025 03:05 AM
கரூர்: மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில், கழிவு பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரிக்கும், ஒரு நாள் பயிற்சி முகாம், தனியார் பள்ளியில் நேற்று நடந்தது.
முகாமை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கும் முறைகளை கலியமூர்த்தி, யோகானந்தம் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்தனர். முகாமில், மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் முருகா-னந்தம், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, பசுமை தோழர் கோபால், பள்ளி தாளாளர் பழனியப்பன், ஆசி-ரியர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.