/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'
/
தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபருக்கு 'காப்பு'
ADDED : நவ 28, 2025 01:22 AM
குளித்தலை. நதொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அடுத்த நெய்தல் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் சண்முகம், 45, கேசவன், 35. இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, சண்முகத்திடம் வாங்கிய கடனை கடந்த, 25ம் தேதி மாலை 6:00 மணியளவில் கேட்டபோது, கேசவன் தகாத வார்த்தையால் பேசியதுடன், கத்தியை எடுத்து இனிமேல் பணத்தை திரும்பி கேட்பாயா எனக்கூறி கழுத்து, கைகளில் வெட்டி உள்ளார்.
படுகாயமடைந்த சண்முகம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சண்முகம் அளித்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து, கேசவனை கைது செய்தனர்.

