தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சாலை அமைக்க காலதாமதம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

சாலை அமைக்க காலதாமதம் அதிகாரிகளை கண்டித்து மறியல்

சாலை அமைக்க காலதாமதம் அதிகாரிகளை கண்டித்து மறியல்


ADDED : ஜூன் 23, 2026 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை; குளித்தலை அருகே கே.பேட்டை பஞ்., சீகம்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே, 1 கி.மீ., துாரம் வரை புதிய தார் சாலை அமைக்க கடந்த ஜனவரி இறுதியில் பணிகள் துவங்கின. இதையடுத்து, ஏற்கனவே இருந்த சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. அதன் பின் சாலை அமைக்க எந்த பணிகளும் மேற்கொள்ளா-ததால், அந்த வழியாக செல்வோர் சிரமப்படுகின்-றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்த போதும் பணிகள் துவங்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிய-ளவில், கருர் - திருச்சி தேசிய நெடுஞ்சா-லையின் குறுக்கே அமர்ந்து, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கே.பேட்டை ஊராட்சி நிர்-வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்-டத்தில் பொது

மக்கள் ஈடுபட்டனர்.

லாலாபேட்டை போலீசார், போராட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்-போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, சாலை பணிகளை விரைந்து முடிக்க கூறு-வதாக உறுதியளித்தனர். இதனால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 30 நிமிடங்க-ளுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஒரு வாரத்தில் சாலை பணி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும் என, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் உறுதிய-ளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us