/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 08:22 AM

குளித்தலை: நுாறு நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, குளித்தலையில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளித்தலை அடுத்த வைகை நல்லுார் பஞ்., கோட்டைமேடு யூனியன் அலுவலகம் அருகே குளித்தலை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்-றிய செயலாளர் சந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன் தலைமை வகித்-தனர். குளித்தலை தி.மு.க., --- எம்.எல்.ஏ., மாணிக்கம், அரசு வழக்கறிஞர் நீலமேகம், வி.சி. கருர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் மத்திய அரசை கண்டித்து பேசினர். மாவட்ட பிரதிநிதி பெரியசாமி நன்றி தெரி-வித்தார்.* கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் சசிக்குமார், பழைய ஜெயங்-கொண்டம் நகர செயலாளர் மோகன்ராஜ், விடு-தலை சிறுத்தைகள் கட்சி மேற்கு ஒன்றிய செய-லாளர் மகாமுனி என்ற வன்னியரசு, மற்றும் இதர கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்-டனர்.

