/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மறியல் போராட்டம்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி மறியல் போராட்டம்
ADDED : டிச 19, 2024 01:09 AM
கிருஷ்ணராயபுரம், டிச. 19-
பழையஜெயங்கொண்டம், எம்.ஜி.ஆர்., நகர் கிழக்கு பகுதி அருகில், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம், தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அந்த நிலத்தை மீட்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து எம்.ஜி.ஆர்., நகர் கிழக்கு பகுதியில், அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடங்களை தனி நபர்கள் பட்டா பெற்று பயன்டுத்தி வருகின்றனர். இந்த புறம்போக்கு நிலத்தை மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் நேற்று காலை எம்.ஜி.ஆர்., நகர் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவர்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட இடம் தனி நபர்கள் வசம் இருப்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை முடிந்த பிறகு, இந்த இடம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.