ADDED : ஆக 08, 2025 01:39 AM
குளித்தலை, குளித்தலை காந்தி சிலை முன், வளரும் தமிழகம் கட்சி சார்பில், துாத்துக்குடியில், மென்பொறியாளர் கவின் படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்ற
வாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், ஆணவ படுகொலைக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும், குளித்தலையில் கண்டன ஆர்ப்பாட்டம்
நடந்தது.
மாநில மாணவரணி செயலர் தமிழன் துரைராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலர் சிங்கை சரவணசோழன், மத்திய மண்டல அமைப்பு செயலர் ஐயா அம்பேத், தோகைமலை ஒன்றிய செயலர் பாண்டி, வக்கீல் வாசு ஆகியோர் பேசினர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆணவ படுகொலைக்கு எதிராக, தனி சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற வலியுறுத்தியும். மென்பொறியாளர் கவின் படுகொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.