/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை அருகே கோவில் பிரச்னை தொடர்பாக மறியல்
/
வெள்ளியணை அருகே கோவில் பிரச்னை தொடர்பாக மறியல்
ADDED : ஏப் 29, 2025 01:48 AM
கரூர்:வெள்ளியணை அருகே, கோவில் திருவிழா தொடர்பாக, நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே வடக்கு மேட்டுபட்டியில் மலையன் கோவில் உள்ளது. இங்கு திருவிழா தொடர்பாக, இரு தரப்பினர் இடையே பிரச்னை உள்ளது. நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மல்லையன் கோவில் திருவிழாவை நடத்த, ஒரு தரப்பினர் ஏற்பாடுகளை செய்தனர். அதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கரூர் - திண்டுக்கல் சாலை மேட்டுப்பட்டியில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த, வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் 'புகார் கொடுத்தால், சட்டரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.
இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், கரூர் - திண்டுக்கல் சாலையில், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.