/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 29, 2025 01:19 AM
கரூர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் கிறிஸ்டல் ெஹப்சி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், உச்சநீதிமன்ற மேல்முறையீடு வழக்கை கைவிட வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் தரம்-3 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும், தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 356ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், 11 மாத கால ஒப்பந்த பணி முறையை ஒழிக்க வேண்டும், தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் ஸ்ரீ தேவி, பொருளாளர் அன்பரசன், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், செல்வராணி உள்பட பலர் பங்கேற்றனர்.

