/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 22, 2025 07:15 AM
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சடையாண்டி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட, 21 மாத அகவிலைப்படி இழப்பை சரி செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள, குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் தர்மராஜூ, மாவட்ட துணைத்தலைவர் முத்து கனி, செயலாளர் தங்க வேல், பொருளாளர் குப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.