காலி குடங்களுடன் வெள்ளியணை சாலையில் மறியல் போராட்டம்
காலி குடங்களுடன் வெள்ளியணை சாலையில் மறியல் போராட்டம்
UPDATED : ஜூன் 17, 2026 05:38 AM
ADDED : ஜூன் 17, 2026 05:37 AM

கரூர்:கரூர் அருகே, குடிநீர் வரவில்லை என கூறி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர்
மாநகராட்சி, 48வது வார்டு வெங்ககல் பட்டியில், 100க்கும் மேற்பட்ட
குடும்பத்தினர் வசிக்கின்றனர். அந்த பகுதிக்கு கடந்த, 15 நாட்களாக
சரிவர குடிநீர் வினியோக்ம செய்யப்படவில்லை. இதுகுறித்து, அந்த
பகுதியை சேர்ந்த பொது மக்கள், மாநகராட்சி ஊழியர்களிடம் புகார்
தெரிவித்தும் பயன் இல்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர்கள், நேற்று
காலி குடங்களுடன் வெள்ளியணை சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
தகவல்
அறிந்த, தான்தோன்றிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,
மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, குடிநீர் வினியோகம் செய்ய
உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து,
பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இதனால்,
கரூர்-வெள்ளியணை சாலையில், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
