ADDED : ஜூன் 17, 2026 05:37 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த பில்லுார் அண்ணா ஸ்போர்ட்ஸ் கிளப், அறிவழகன் நினைவு கபடி குழு
மற்றும் ஊர் மக்கள் சார்பாக, மாநில அளவிலான 75ம் ஆண்டு தொடர் கபடி
போட்டி நடந்தது. பில்லுார் அண்ணா விளையாட்டு திடலில் போட்டி நடந்தது.
பில்லுார்
பஞ்., மன்ற முன்னாள் தலைவர்கள் ராக வன், நாகராணி நாகராஜ்,
முருகானந்தம் மற்றும் விழா கமிட்டியாளர்கள், இளைஞர் அமைப்பினர்
போட்டி ஏற்பாடுகளை செய்தனர். கரூர், திருச்சி, திண்டுக்கல்,
புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து, 40 அணிகள் பங்கேற்றன.
முடிவில் பள்ளிப்பட்டி சோலை நற்பணி மன்றம் கபடி குழு அணியினர் வெற்றி
பெற்று, முதல் பரிசாக, 15 ஆயிரத்து 26 ஆயிரம் ரூபாய் மற்றும் 6 அடி உயரம்
கொண்ட சுழல்கோப்பையை தட்டிச்சென்றது. சின்னப்பில்லுார் சிவா
பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழு அணியினர், இரண்டாவது பரிசாக, 12
ஆயிரத்து 26 ஆயிரம் ரூபாய் மற்றும் 5 அடி உயரம் கொண்டசுழல் கோப்பையை
தட்டிச்சென்றது. மூன்றாவது பரிசாக, 10 ஆயிரத்து 26 ஆயிரம் ரூபாய்
மற்றும் 3 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை, இடையபட்டி வி.கே.பிரதர்ஸ்
ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் பெற்றனர்.
