பாரபட்சமற்ற தேர்தல் நடக்கும் வரை போராட்டம்: எம்.பி., ஜோதிமணி
பாரபட்சமற்ற தேர்தல் நடக்கும் வரை போராட்டம்: எம்.பி., ஜோதிமணி
ADDED : அக் 28, 2026 05:07 AM
கரூர்: ''இந்தியாவில் நேர்மையான மற்றும் பாரபட்ச-மற்ற தேர்தல் நடைபெறும் வரை போராட்டம் நடக்கும்,'' என, கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி கூறினார்.
கரூர் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, கரூர் எம்.பி.,அலுவலகத்தில், காங்., எம்.பி., ஜோதிமணி நிருபர்களிடம் கூறியதாவது:நாட்டின் தேர்தல் முறைகளில் இருந்த நம்பகத்-தன்மை சிதைக்கப்பட்டு, குறுக்கு வழியில் தேர்தல் தில்லுமுல்லு மூலம், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே உள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்களின் பெயர்கள் ஒரே வரிசையில் இல்லாமல், வெவ்-வேறு எண்களில் மாற்றப்பட்டு, வாக்காளர்களும், ஓட்டுச்சாவடி முகவர்களும் குழப்பமடையும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
மெஷின் ரீடபிள் என்ற டிஜிட்டல் வடிவத்தில், வாக்காளர் பட்டியலை முதலில் மறுத்த தேர்தல் ஆணையம், தீவிர போராட்டங்களுக்கு பிறகே, தற்போது வழங்குவதாக அறிவித்துள்ளது.
படிவம்--6 விவகாரத்தில், தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் கிடைத்ததாக பொய் கூறுகிறது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக கோரி, டெல்லியில் போராட்டங்கள் நடக்கிறது.
வரும் நவ., 1ல், டெல்லி ராம்லீலா மைதா-னத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடக்கிறது. இந்தியாவில் நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறும் வரை, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலை-மையில் தொடர்ந்து சமரசமின்றி போராடும் நடக்கும்.
இவ்வாறு, கூறினார்.
