ADDED : செப் 26, 2024 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விலையில்லா சைக்கிள் வழங்கல்
அரவக்குறிச்சி, செப். 26-அரவக்குறிச்சி, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, பிளஸ் 1, 2 பயிலும், 37 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, துணைத்தலைவர் தங்கராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.