/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
/
சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 28, 2025 08:20 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், காலி நிலங்கள், முக்கிய தெருவோரங்கள் மற்றும் நங்காஞ்சி ஆறு உள்-ளிட்ட வறண்ட நீர் நிலைகள் என்று எங்கு பார்த்-தாலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அரவக்குறிச்சி தெற்கே குமராண்டான்வலசு, ஈஸ்வரன் கோவிலில் இருந்து கரடிபட்டி வரை நங்காஞ்சி ஆற்றின் மேற்கு கரையோரம், அரசு தலைமை மருத்துவமனை, போலீஸ் குடியிருப்பு, எஸ்.பி. நகர், காந்தி நகர், தாலுகா அலுவலகம், கிழக்கு தெரு, முதலியார் தெரு, போஸ்ட் ஆபீஸ் பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரக்கணக்-கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளின் நடுவில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மேலும் நங்காஞ்சி ஆறு முழுவதும் சீமை கரு-வேல மரங்கள் முட்காடுகள் போல வளர்ந்துள்-ளது. இதனால் இந்த இடத்தில் மழை தண்ணீர் குளம் போல் தேங்குகிறது.
மேலும் ஆற்றில் சாக்கடை கழிவுகள் தேங்கு-வதால் துர்நாற்றம் வீசுகிறது. விவசாய கிண-றுகள், வீடுகளிலுள்ள ஆழ்குழாய் கிணறுகள் உள்-ளிட்டவைகளில், கருவேல மரங்களின் வேர்கள் பூமிக்குள் சென்று நீர் ஆதாரங்களை உறிஞ்சி அழிக்கின்றன. சுற்றுப் பகுதியில், 5,000 ஏக்க-ருக்கும் மேல் பயிரிட்டுள்ள முருங்கை பயிர் உள்-ளிட்டவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமைக்கருவேல மரங்களை, வேருடன் முற்றிலுமாக அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க-வேண்டும். மேலும் ஆற்றோரங்களில் மரக்கன்-றுகள் நடப்பட்டு பாதுகாக்க வேண்டும். இதனால், கரையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் வெள்ள அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும். சுகாதாரம் பாதுகாக்கப்படும். விவசாய கிணறுகள், வீட்டு ஆழ்குழாய் கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதுடன் சுற்றுச்சூழலும் காப்பாற்-றப்படும்.

