/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வணிக கடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
வணிக கடைகள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : டிச 28, 2024 02:02 AM
குளித்தலை: குளித்தலை, காவேரி நகரில் யூனியன் நிர்வாகத்தின் கட்டுப்-பாட்டில் அண்ணா திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. மண்டபம் முன்பகுதியில், பூமாலை திட்டம் மூலம் இரண்டு கடைகள் மகளிர் சுய உதவி குழுவினர், கைவினை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டது.
பின்னர், மகளிர் குழுக்கள் பராமரிக்கப்படாததால் யூனியன் நிர்வாகம் இரண்டு கடைகளை தனியாருக்கு வாடகை விட்டது. மண்டபத்தின் வடபகுதியில், 10 கடைகள் தரைப்பகுதியிலும், மேல் பகுதியில் கடைகள் அமைக்க ஏதுவான இட அமைப்பு உள்ளது.
யூனியன் நிர்வாகத்திற்கு வருவாய் பெருக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கடைகள் கட்டப்பட்டு, பொதுமக்க-ளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என, பொதுமக்கள் கலெக்ட-ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

