/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆத்துார் கல்குவாரியில் கழிவுகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அச்சம்
/
ஆத்துார் கல்குவாரியில் கழிவுகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அச்சம்
ஆத்துார் கல்குவாரியில் கழிவுகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அச்சம்
ஆத்துார் கல்குவாரியில் கழிவுகளுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அச்சம்
ADDED : நவ 02, 2025 12:57 AM
கரூர், கரூர் அருகே, ஆத்துார் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான, உயர் அழுத்த பெட்ரோலியம் பைப் லைன் அருகில், கைவிடப்பட்ட கல்குவாரியில் கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
கரூர் அருகில், ஆத்துார் பூலாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட, ஆத்துார் சமத்துவபுரம் அருகில் கைவிடப்பட்ட கல்குவாரி உள்ளது. அந்த கல்குவாரி பள்ளத்தில், தொழிற்சாலை உள்பட பல்வேறு கழிவு பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி வீசி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று, கழிவுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ பரவி மளமளவென எரிந்ததால், வானில் பல அடி துாரத்திற்கு புகைமண்டலமாக காட்சியளித்தது. பொதுவெளியில் கொட்டப்பட்ட தொழிற்சாலை கழிவுகளில் இருந்து, வெளியேறக்கூடிய கரும்புகையால், அப்பகுதி மக்கள் சுவாச பிரச்னையால் அவதிப்பட்டனர்.
கல்குவாரி அருகில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு செல்லக்கூடிய, உயர் அழுத்த பெட்ரோலிய பைப்லைன் அமைந்துள்ள பகுதிக்கு அருகிலேயே, கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தானது. அப்பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

