/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் குவிந்த பொதுமக்கள்
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் குவிந்த பொதுமக்கள்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் குவிந்த பொதுமக்கள்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் குவிந்த பொதுமக்கள்
ADDED : நவ 24, 2024 12:57 AM
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த
முகாமில் குவிந்த பொதுமக்கள்
கரூர், நவ. 24-
கரூரில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாமில், ஏராளமான பொது மக்கள் மனுக்களை வழங்கினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வரும், 2025ம் ஆண்டுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் கடந்த மாதம், 29 முதல் வரும், 28 வரை நடக்கிறது.
இதுதொடர்பாக, கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,055 ஓட்டுச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம், 20ல் வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை, திருத்த முகாம் நடந்து வருகிறது. நேற்று கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட, பணிக்களுக்கான மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன., 6 ல் வெளியாக உள்ளது.
* கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர்கள் புதிதாக பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் ஆகிய பணிகளுக்கான முகாம் நடந்தது. முகாம் நடக்கும் இடங்களை கிருஷ்ணராயபுரம் தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள், ஆய்வு செய்தனர்.