/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கல்
/
மக்கள் குறைதீர் கூட்டம்: நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 23, 2025 01:20 AM
கரூர் :கரூர் கலெக்டர் அலுவலத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி உள்பட, 520 மனுக்களை பெற்றார்.
மண்மங்கலம் அருகில் பஞ்சமாதேவி கிராமத்தை சேர்ந்த காளியப்பன் மனைவி அழகம்மாள் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து, 1 லட்சம் காசோலை, தாட்கோ மூலம் திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ், 8 பயனாளிகளுக்கு தொழில் தொடங்குவதற்கு தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வங்கிக் கடனுதவி என மொத்தம், 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, சப்-கலெக்டர் பிரகாசம், உதவி ஆணையர் கலால் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.