/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை நடுவே மின் கம்பம் விபத்து பீதியில் பொது மக்கள்
/
சாலை நடுவே மின் கம்பம் விபத்து பீதியில் பொது மக்கள்
சாலை நடுவே மின் கம்பம் விபத்து பீதியில் பொது மக்கள்
சாலை நடுவே மின் கம்பம் விபத்து பீதியில் பொது மக்கள்
ADDED : ஜன 13, 2025 03:09 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அருகே, கருப்பன் கவுண்டன்புதுார் பகு-தியில் உள்ள சாலைகள் பல மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டன.
அப்போது சாலை நடுவே இருந்த மின் கம்-பத்தை, பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்கப்படும் என, அப்-பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், சாலை அமைக்கும் பணி முடிந்த பின்னும் மின் கம்பம் மாற்றியமைக்க-வில்லை. தற்போது மின் கம்பம் சாலை நடுவே போக்குவரத்-துக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும், தின்னப்பா நகர், காந்தி கிராமம் பகுதியில் இருந்து வரும் பள்ளி வாகனங்கள், கருப்பக-வுண்டன்புதுார் பகுதி வழியாக தான்தோன்றிமலைக்கு செல்கி-றது. அப்போது, சாலை நடுவே உள்ள, மின் கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கூறியதாவது: கருப்பன்கவுண்டன்புதுாரில், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றக்கோரி, பலமுறை கோரிக்கை வைத்தும் மின் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ள-வில்லை. இரவு நேர த்தில்இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள், மின் கம்பத்தில் மோதி காயமடைகின்றனர். சிறிய அளவிலான விபத்து ஏற்படும் போதெல்லாம், மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.