ADDED : ஜூலை 06, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் பஞ்.,க்குட்பட்ட புன்னம் பசுபதிபாளையம், பழமாபுரம் ஆகிய பகுதிகளில் சமுதாய கூடமும், எம்.ஜி.ஆர்., நகரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது. அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ தொடங்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்., தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.