sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி விழா தேரோட்டம்


ADDED : அக் 12, 2024 07:25 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவை யொட்டி இன்று தேரோட்ட விழா நடக்கிறது.

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் பிரசித்தி பெற்ற, கல்-யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்-டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு அக்., 4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்-சவர் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 10 மாலை, 4:00 மணிக்கு

திருக்கல்யாண உற்சவம் நடந்தது.புரட்டாசி திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.அதற்காக, அலங்கரிக்கப்பட்ட தேர் கோவில் வளாகத்தில் நிறுத்-தப்பட்டுள்ளது. அதை, நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள்

வணங்கினர். தேரோட்ட விழா மற்றும் நான்காவது சனிக்கிழமை-யையொட்டி, இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,

போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் வரும், 21 ல் முத்து பல்லாக்கு, 22 ல் ஆளும் பல்-லாக்கு, 23ல், வண்ண பூக்களால் வேள்வி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us