ADDED : மே 20, 2026 04:42 AM
கரூர்:'முயல் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம், வரும், 22ல் நடக்கிறது' என, கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர்
சக்திவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதுாரில் அமைந்துள்ள கால்நடை பல்கலை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில், 'முயல் வளர்ப்பு பயிற்சி முகாம், வரும், 22ல் நடக்கிறது.
இப்பயிற்சியில் இறைச்சி உற்பத்திக்கு ஏற்ற முயல் இனங்கள், முயல்களுக்கு கொட்டகை அமைத்தல், தீவன மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, குட்டிகள் பராமரித்தல், முயலை தாக்கும் தொற்று நோய்கள், பண்ணை பொருளாதாரம் ஆகிய தலைப்புகளில் பல்கலை பேராசிரியர்களால் பயிற்சி நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், நேரிலோ அல்லது, 04324-294335, 7339057073 ஆகிய எண்ணகளில் தொடர்பு கொண்டு, நாளை மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
