ADDED : டிச 30, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் குப்பம் பஞ்சாயத்துக்குட்-பட்ட கிராமங்களில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்-தது. குப்பம் மருந்தக கால்நடை டாக்டர் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், ஆடு, மாடுகள், வெள்ளாடுகள் உள்ளிட்ட, நுாற்றக்கும் மேற்பட்ட கால்நடைக-ளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், விவ-சாயிகளுக்கு தாது உப்பு கலவை பொட்டலங்கள் வழங்கப்பட்-டன. விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்-நடை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கையேட்டை வழங்-கினார்.
நிகழ்ச்சியில் குப்பம் மருந்தக உதவியாளர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.

