sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி

/

ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே பாலத்தின் தரைத்தளம் சேதம்:வாகன ஓட்டிகள் அவதி


ADDED : அக் 17, 2024 01:24 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில்வே பாலத்தின் தரைத்தளம்

சேதம்:வாகன ஓட்டிகள் அவதி

கரூர், அக். 17-

கரூர் அருகே, ரயில்வே பாலத்தில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்,

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு ரயில்வே வழித்தடம், அரிக்காரன்பாளையத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. அதன் வழியாக நாள்தோறும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ரயில்வே பாலத்தில் பல இடங்களில் தரைத்தளம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே பாலத்தில், கான்கிரீட் கம்பிகள் நீட்டிய நிலையில் உள்ளது. இதனால், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, கரூர் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள், மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதியில் இருந்து, கோவை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்----சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, அரிக்காரன் பாளையம் ரயில்வே பாலத்தில், சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us