/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்று நீரால் அவதி
/
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்று நீரால் அவதி
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்று நீரால் அவதி
ரயில்வே குகை வழிப்பாதையில் தேங்கும் ஊற்று நீரால் அவதி
ADDED : ஏப் 24, 2025 01:30 AM
கரூர்:கரூர் அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்று நீர் தேங்-கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர் அருகே, வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம், கரூர் டவுன் எம்.ஜி., சாலையை இணைக்கும் வகையில், ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் குகை வழிப்பாதை கட்டப்பட்டது. அதை பொதுமக்கள் தற்-போது, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே குகை வழிப்பாதையில் வடிகால் வசதியில்லை. இதன் அருகில், அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. மழை காலத்தில் ரயில்வே குகை வழிப்பாதையில் ஊற்றெடுத்த தண்ணீர் தேங்கி இருந்தது.
தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில், வாய்க்காலில் தண்ணீர் செல்லாத போது, ஊற்றெடுத்து தண்ணீர் தேங்கி இருப்பதால் சேறும் சகதியுமாக இப்பகுதி உள்ளது. ரயில்வே குகை வழிப்பா-தையில் நடந்து கூட செல்ல முடியாமல், பொதுமக்கள் அவதிப்ப-டுகின்றனர். இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும், குகை வழிப்பாதை வழியாக செல்லும் போது கவனமாக செல்ல வேண்டி உள்ளது. இல்லையென்றால் தடுமாறி விழும் அபாயம் உள்ளது. எனவே, பெரிய குளத்துப்பாளையம் ரயில்வே குகை வழிப்பா-தையில், தேங்கியுள்ள நீரை அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்-பார்க்கின்றனர்.

