/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை; தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை
/
ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை; தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை
ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை; தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை
ரயில்வே கேட்டில் குகை வழிப்பாதை; தற்காலிக சாலை அமைக்க கோரிக்கை
ADDED : மே 29, 2024 07:23 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, மருதுார் முதல் மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் மருதுார் ரயில்வே கேட்டில் இருப்பு பாதைக்கு அடியில், குகைவழி பாதை அமைக்கும் பணிக்கான பணிகள் நடந்து வருகிறது.
மருதுார், மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி. கூடலுார் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்களுக்கு, மருதுார் மேட்டு மருதுார் சாலை முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ், தனியார் பள்ளி, கல்லுாரி வேன், பஸ், மற்றும் பொது மக்கள் தங்களது கார், வேன், விவசாயிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் ரயில்வே சுரங்கபாதை (குகைவழி பாதை) அமைக்கும் போது, சாலையில் வாகனங்கள் செல்லும் வகையில் பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என, சேலம் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, குகை வழிபாதை அமைப்பதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. வாகனங்கள் வந்து செல்லும் வகையில், தற்காலிக சாலை அமைத்து தரவேண்டும் என பகுதி கிராம மக்கள், விவசாயிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.