/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் சின்னவெங்காயம் அறுவடை பணியில் பாதிப்பு
/
மழையால் சின்னவெங்காயம் அறுவடை பணியில் பாதிப்பு
ADDED : ஆக 12, 2025 01:07 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மழை காரணமாக சின்னவெங்காயம் அறுவடை பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பகாப்பட்டி, வயலுார், பாம்பான்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், கோடங்கிப்பட்டி, சிவாயம், தேசியமங்களம் ஆகிய இடங்களில் சின்னவெங்காயம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது கூலி தொழிலாளர்களை கொண்டு சில இடங்களில் அறுவடை பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக, இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால் விளைச்சல் கண்டுள்ள சின்ன வெங்காயத்தை, அறுவடை செய்யும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், அறுவடை செய்யப்பட்ட சின்னவெங்காயத்தை வெயிலில் உலர்த்த முடியாமல் ஈரத்துடன் இருப்பதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் விலையும் சரிந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம் நேற்று, 25 ரூபாயாக விற்றது. அறுவடை செய்யப்படும் சின்ன வெங்காயம் கரூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்படும், மண்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.