/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை
/
கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை
கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை
கொல்லிமலை வெண்டாங்கியில் தரைப்பாலத்தை மூழ்கடித்த மழை
ADDED : டிச 02, 2025 02:17 AM
சேந்தமங்கலம், தொடர் மழையால், வெண்டாங்கியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் தொடர் மழை பெய்து வருவதால், அங்குள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், அங்குள்ள நீர் வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வனப் பகுதியில் உள்ள ஓடைகள் வழியாக வெளியேறும் தண்ணீர் முழுவதும், கொல்லிமலை அடிவார பகுதியில் உள்ள காரவள்ளி பெரிய ஆற்றுக்கு சென்றடைகிறது. இந்நிலையில், வெண்டாங்கியில் இருந்து பள்ளம்பாறை செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் பாய்ந்தோடுகிறது.
இதனால், அந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும், அந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, அப்
பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

