/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்
/
மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கல்
ADDED : டிச 02, 2025 02:17 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த, சீத்தப்பட்டி சாந்திவனம் மனநல காப்பகத்தில், தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்கம் தோகைமலை ஒன்றிய கிளை சார்பாக, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அரசாணை எண் 171ன்படி, காலமுறை ஊதியம் வழங்கிய 7ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர்கள் கலியராஜா, இளங்கோவன், ஒன்றிய பொறுப்பாளர்கள் செந்தில்குமார், வரதராஜ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு பஞ்., செயலாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் பில்லுார் வெங்கடேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர் நேசமணி ஆகியோர், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
இந்தநிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் மற்றும் சாந்திவனம் மனநலகாப்பக இயக்குனர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

