/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இனுங்கூரில் கிராம அறிவுசார் கட்டடத்துக்கு பூமி பூஜை
/
இனுங்கூரில் கிராம அறிவுசார் கட்டடத்துக்கு பூமி பூஜை
இனுங்கூரில் கிராம அறிவுசார் கட்டடத்துக்கு பூமி பூஜை
இனுங்கூரில் கிராம அறிவுசார் கட்டடத்துக்கு பூமி பூஜை
ADDED : டிச 02, 2025 02:13 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த இனுங்கூர் காசா நகரில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாட்கோ மூலம், ரூ.70 லட்சத்து, 93 ஆயிரம் மதிப்பில் கிராம அறிவுசார் கட்டடம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாஜி மாவட்ட பஞ்., குழு துணைத் தலைவர் தேன்மொழி தியாகராஜன், நகர பொருளாளர் தமிழரசன், பிரதிநிதி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தாட்கோ உதவி பொறியாளர் வைஷ்ணவி, ஒப்பந்ததாரர்கள் ஆரியபிரகாஷ், அரவிந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.