/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெடுஞ்சாலையில் ஓடிய மழை நீர்; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
/
நெடுஞ்சாலையில் ஓடிய மழை நீர்; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
நெடுஞ்சாலையில் ஓடிய மழை நீர்; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
நெடுஞ்சாலையில் ஓடிய மழை நீர்; ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூன் 20, 2024 07:13 AM
குளித்தலை: வடிகாலை ஆக்கிரமித்துள்ளதால், மழைநீர் கழிவு நீருடன் சாலையில் ஓடியது.குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., குளித்தலை - தோகைமலை நெடுஞ்சாலையில் அய்யர்மலை கடைவீதி மற்றும் பஸ் நிறுத்தத்தில் மேற்கு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பின்னர், அந்த இடத்தில் பஞ்., பொது நிதியில் இருந்து கழிவு நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், குடியிருப்போர் வடிகாலை மண் போட்டு அடைத்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர் தார்ச்சாலையில் ஓடுகிறது. இதுனால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், அய்யர்மலை, சிவாயம் ஆகிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தில் அவதியுறுகின்றனர். மேலும், நேற்று பெய்த மழை தண்ணீர் நெடுஞ்சாலையில் ஓடியது. எனவே, கழிவுநீர் வடிகாலில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.