தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் மாவட்டத்தில் மழை

கரூர் மாவட்டத்தில் மழை

கரூர் மாவட்டத்தில் மழை


ADDED : நவ 09, 2026 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்டத்தில் பல இடங்களில், நேற்று அதிகாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது.

தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் கரூர் வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பிறகு, மாலை கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.

மழை நிலவரம்

கரூர் மாவட்டத்தில் நேற்று காலை, 6:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம்: (மி.மீ.,) கிருஷ்ணராயபுரம், 11, மாயனுார், 4, பஞ்சப்பட்டி, 15, கடவூர், 4, பாலவிடுதி, 5, மயிலம்பட்டி, 2 என, மாவட்டம் முழுவதும், 41 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக, 3.42 மி.மீ., மழை பெய்தது.

மாயனுார் கதவணை

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 375 கன அடி தண்ணீர் வந்தது. கதவணையில் இருந்து, டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 906 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us