ADDED : அக் 17, 2026 07:35 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, அய்யர்மலை,
குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டு, கோடங்கிப்பட்டி,
சரவணபுரம், வயலுார், பாம்பன்பட்டி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம்
இரவு, 1 மணி நேரம் மழை பெய்தது.
இதன் காரணமாக மழைநீர் சாலையின் பல
இடங்களில் தேங்கியது. மண் சாலை அரிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள்
சிரமப்பட்டனர். மேலும் சரவணபுரம், கோடங்கிப்பட்டி,
குழந்தைப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள, மழைநீர் சேமிப்பு குளங்கள்
நிரம்பின. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.
