தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/மழையால் விளைச்சல் அதிகரிப்பு; எலுமிச்சம் பழம் விலை குறைந்தது

மழையால் விளைச்சல் அதிகரிப்பு; எலுமிச்சம் பழம் விலை குறைந்தது

மழையால் விளைச்சல் அதிகரிப்பு; எலுமிச்சம் பழம் விலை குறைந்தது


ADDED : பிப் 12, 2025 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2025 07:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: வடகிழக்கு பருவமழை காரணமாக, எலுமிச்சம் பழம் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளது.

ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலம் நிலவுவது வழக்கம். நடப்பாண்டு, பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து வெயில் அதிகளவில் நிலவி வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த, ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் எலுமிச்சம் பழம் ஜூஸ் அருந்துவது வழக்கம்.

கரூர் மாவட்டத்தில், எலுமிச்சைக்கு என சாகுபடி அதிகளவில் இல்லை. இப்பகுதி மக்கள் வெளி மாவட்டத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளது. கரூரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம், ஒரு கிலோ எலுமிச்சம் பழம், 100 முதல், 130 ரூபாய் வரை விற்றது. தற்போது, விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுகளில், ஒரு கிலோ 50 முதல், 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, விற்பனையாளர்கள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை சாகுபடி கிடையாது. விவசாய தோட்டங்களில், ஒரு சில எலுமிச்சை மரங்கள்தான் உள்ளன. நாள்தோறும் கரூர் மாவட்டத்துக்கு, வெளியூரில் இருந்து பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது விலை குறைந்த நிலையில், வரும் மே மாதம் வெயில் உச்சத்தை தொடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது குளிர்பானங்கள் தயாரிப்பு, உணவு பொருட்கள் தயாரிப்புக்கு எலுமிச்சைக்கு தேவை அதிகரிக்கும். மார்ச் மாத இறுதியில் இருந்து மே மாதம் வரை, எலுமிச்சை விலை அதிகரிக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us