ADDED : நவ 24, 2026 04:42 AM
குளித்தலை; குளித்தலை ஊராட்சி ஒன்றியம், நல்லுார் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துக்குமார் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா, ஊராட்சி செயலாளர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி நல்லுார் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் ஊராட்சியை வந்தடைந்தது. பொதுமக்களுக்கு, மழை நீர் சேகரிப்பு செய்வது மூலம் ஏற்படும் நன்மை குறித்து, துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், ஊராட்சி துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.* ராஜேந்திரம் ஊராட்சியில் நடந்த மழைநீர் சேகரிப்பு பேரணிக்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபிநாத் தலைமை வகித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ஊராட்சி செயலாளர் ரமா, மழைநீர் சேகரிப்பும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.
பள்ளி மாணவ, மாணவியர், ஊராட்சி துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று, பின்னர் ஊராட்சி அலுவலகம் வந்தடைந்தனர்.
