/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் சேமிப்பு குழிகள் வயலுார் பஞ்.,ல் அமைப்பு
/
மழைநீர் சேமிப்பு குழிகள் வயலுார் பஞ்.,ல் அமைப்பு
ADDED : நவ 12, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்., பஞ்சப்பட்டி பகுதியில் இருந்து வரும் புங்காற்று நெடுகை, கோட்டமேடு வரை செல்கிறது. 'புங்காற்று நெடுகை' என்பது மழைக்காலங்களில் உபரி மழைநீர் வெளியேறுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு வாய்க்கால் அல்லது வடிகாலை குறிக்கிறது. இந்த புங்காற்று நெடுகையில், பஞ்சப்பட்டி, வயலுார் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வடிந்து செல்கிறது. இதனால், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
தற்போது வயலுார் பஞ்.,க்குட்பட்ட பகுதி
களில் செல்லும் புங்காற்று நெடுகை வழித்
தடங்களில் பஞ்சாயத்தில் உள்ள நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு மழைநீர் சேமிப்பு குழிகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. இதன் மூலம் மழைக்காலங்களில் மழை நீர் சேமிக்க முடியும். மேலும், விவசாயிகளுக்கு பயன்
கிடைக்கிறது.

