/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் காப்பீடு திட்டத்தில் 25,841 பேருக்கு சிகிச்சை
/
முதல்வர் காப்பீடு திட்டத்தில் 25,841 பேருக்கு சிகிச்சை
முதல்வர் காப்பீடு திட்டத்தில் 25,841 பேருக்கு சிகிச்சை
முதல்வர் காப்பீடு திட்டத்தில் 25,841 பேருக்கு சிகிச்சை
ADDED : நவ 12, 2025 01:28 AM
கரூர், 'முதல்வர் காப்பீடு திட்டத்தில் இதுவரை, 25,841 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது' என, கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு, 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும், 1,090 சிகிச்சை முறைகள், 8 தொடர் சிகிச்சை வழிமுறைகள், 52 அறிதல் கண்டு
பிடிப்பு முறைகள் உள்ளிட்ட, 1,150 மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 7 அரசு மருத்துவமனைகள், 18 அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை என மொத்தம், 26 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2023 முதல், 2025ம் ஆண்டு அக்.,31 வரை, 25,841 பேருக்கு, 24.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ சிகிச்சை, கட்டணமில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து தெரிந்துகொள்ள, 1800 425 3993 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.

