/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உடல் உறுப்புகள் விற்பனை செய்தலுக்கு எதிராக பேரணி
/
உடல் உறுப்புகள் விற்பனை செய்தலுக்கு எதிராக பேரணி
ADDED : செப் 20, 2025 02:10 AM
நாமக்கல், உடல் உறுப்புகளை விற்பனை செய்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, நேற்று நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையில் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். மோகனுார் சாலை, டாக்டர் சங்கரன் சாலை, திருச்சி சாலை, மணிக்கூண்டு வழியாக மீண்டும் பழைய அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
பேரணியில், உடல் உறுப்புகள் இன்றியமையாதது விற்பனை செய்யாதே. உடல் உறுப்புகள் கடத்துவதை தடுப்போம். துயரத்திற்கு முடிவு கட்டுங்கள்; மனித உறுப்பு கடத்தலை நிறுத்துங்கள். உடல் உறுப்பு விற்பனை குறித்து தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். ஆர்.டி.ஓ., சாந்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், கூடுதல் எஸ்.பி., தனராசு உள்பட பலர் பங்கேற்றனர்.