ADDED : நவ 19, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., கட்சி சார்பில் பேரணி
கரூர், நவ. 19-
கரூர் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில், மாநாட்டையொட்டி தொண்டர்கள் பங்கேற்ற பேரணி, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமையில் நேற்று நடந்தது.
கரூர் மனோகரா கார்னரில் இருந்து, தொடங்கிய பேரணி ஜவஹர் பஜார், பழைய திண்டுக்கல் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் வழியாக உழவர் சந்தையை அடைந்தது. பிறகு, பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, ராதிகா, நிர்வாகிகள் தண்டபாணி, ஜீவானந்தம், முருகேசன், சுப்பிரமணியன், கந்தசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

