/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி மஹோத்ஸவம்
/
கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி மஹோத்ஸவம்
ADDED : ஏப் 07, 2025 02:18 AM
கரூர்: கரூர், ராம் நகர் ஸ்ரீ பக்த அபய கோதண்டராமர் கோவிலில், ராமநவமி மஹோத்ஸவ விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கரூர், ராம் நகர் கோதண்ட ராமர் கோவிலில், ராமநவமி மஹோத்ஸவ விழா நேற்று காலை, 6:00 மணிக்கு ஆரத்தியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, சிறப்பு யாகம், மூலவர் சிலைக்கு காவிரி தீர்த்தத்தால் சங்கு அபிேஷகம் மற்றும் விஷ்ணு சகஸ்ராம அர்ச்சனை நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், சணப்பிரட்டி கோதண்டராமர் கோவிலில், ராம நவமியையொட்டி, சிறப்பு அபிேஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மேலும், கரூர் ஷீரடி சாயி சேவா சமாஜ் சார்பில், சாய்பாபா கோவிலில், நேற்று ராமநவமி உற்சவம் ஆரத்தியுடன் தொடங்கியது. பிறகு புஞ்பாஞ்சலியுடன், மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டையில் ராம ஆஞ்ச-நேயர் சுவாமி கோவிலில்ராம மூலமந்திர ஹோமம், மூர்த்தி ஹோமம், ராம சடாசரி ஹோமம் ஆகியவை நடந்தன. பின், திரு-மஞ்சனம் சாற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ராம ஆஞ்-சநேயருக்கு சிறப்பு வழிபாடு பூஜை செய்யப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு சுவாமி விக்ரக திருமேனியுடன் திருவீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

