/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி மஹோத்சவம்
/
கோதண்ட ராமர் கோவிலில் ராமநவமி மஹோத்சவம்
ADDED : ஏப் 18, 2024 07:03 AM
கரூர் : கரூர், ராம் நகர் கோதண்ட ராமர் கோவிலில், ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ விழா நேற்று நடந்தது.
கரூர், ராம் நகர் கோதண்ட ராமர் கோவிலில், ஸ்ரீ ராமநவமி மஹோத்சவ விழா நேற்று காலை, 6:00 மணிக்கு ஆரத்தியுடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு யாகம், மூலவர் சிலைக்கு, காவிரி தீர்த்ததால் சங்கு அபி ேஷகம் மற்றும் விஷ்ணு சகஸ்ராம அர்ச்சனை நடந்தது. மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல், கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ராம நவமியையொட்டி, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். * லாலாப்பேட்டை, கொடிக்கால் தெருவில் ராமஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ராமநவமி சிறப்பு வழிபாடு பூஜைகள் நடப்படுவது வழக்கம். நேற்று காலை முதல் இரவு வரை ராம ஆஞ்சநேயருக்கு அபி ேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

