ADDED : ஜன 04, 2026 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்-றுத்திறனாளி ரேஷன் அட்டைதாரர்களின் இல்-லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்-டத்தில், 728 ரேஷன் கடைகளை சேர்ந்த, 32,154 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் வாகனங்களில் ரேஷன் பொருட்களை எடுத்து சென்று, ரேஷன் கடை ஊழியர்கள் வினியோகம் செய்து வருகின்றனர். இம்மாதம் இன்றும், நாளையும் (4, 5ம் தேதி) வீடு-களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

