/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடவூர் பஞ்., இரண்டாக பிரிப்பு ஆட்சேபனை தெரிவிக்கலாம்
/
கடவூர் பஞ்., இரண்டாக பிரிப்பு ஆட்சேபனை தெரிவிக்கலாம்
கடவூர் பஞ்., இரண்டாக பிரிப்பு ஆட்சேபனை தெரிவிக்கலாம்
கடவூர் பஞ்., இரண்டாக பிரிப்பு ஆட்சேபனை தெரிவிக்கலாம்
ADDED : ஜன 04, 2026 07:51 AM
கரூர்: கடவூர் பஞ்சாயத்து இரண்டாக பிரித்ததற்கு, ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், 157 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அதிக எண்ணிக்கையிலான குக்கிரா-மங்கள், மக்கள் தொகை, பரப்பளவு மற்றும் வீடு-களை கொண்ட கடவூர் பஞ்சாயத்தை, 23 குக்கி-ராமங்களை கொண்ட இடையப்பட்டி கிழக்கு, 11 குக்கிராமங்களை கொண்ட கடவூர் மேற்கு என, இரண்டு பஞ்சாயத்தாக பிரிக்கப்பட்டு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருந்தால், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), அறை எண். 208 இரண்டாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவ-லகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.