/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மணவாசி டோல்கேட்டில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் அவஸ்தை
/
மணவாசி டோல்கேட்டில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் அவஸ்தை
மணவாசி டோல்கேட்டில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் அவஸ்தை
மணவாசி டோல்கேட்டில் பராமரிப்பு இல்லாத கழிப்பிடத்தால் அவஸ்தை
ADDED : ஜன 04, 2026 07:50 AM
கரூர்: கரூர் அருகே மணவாசி டோல்கேட்டில், கழிப்-பிடம் பூட்டப்பட்டும், பராமரிப்பு இல்லாத நிலையும் உள்ளது. இதனால், பொதுமக்கள் அவ-திப்படுகின்றனர்.
கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மண-வாசியில் டோல்கேட் அமைந்துள்ளது. அதன் வழியாக செல்லும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், கரூர்-திருச்சி சாலை, திருச்சி-கரூர் சாலையில் டோல்கேட்-டையொட்டி, துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இரண்டு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஆனால், கழிப்பிடங்களை நாள்தோறும் டோல்கேட் ஊழியர்கள் சுத்தம் செய்வது இல்லை.
இதனால், தொற்று பரப்பும் மையங்களாக மண-வாசி டோல்கேட் கழிப்பிடங்கள் உள்ளன. குறிப்-பாக, கரூர் - திருச்சி சாலையில் உள்ள கழிப்-பிடம், பெரும்பாலும் திறக்கப்படாமல் பூட்டப்பட்-டுள்ளது.
இதனால், அந்த வழியாக செல்லும் பொது மக்கள் சாலையை கடந்து, எதிர் திசையில் உள்ள கழிப்பிடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்-ளது. இதுகுறித்து, டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டால், சரியான பதில் இல்லை. எனவே, மணவாசி டோல்கேட்டில் உள்ள கழிப்-பிடங்களை நாள்தோறும் திறந்து வைத்து, பராம-ரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

