/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் குறைதீர் கூட்டம் 18 மனுக்களுக்கு தீர்வு
/
ரேஷன் குறைதீர் கூட்டம் 18 மனுக்களுக்கு தீர்வு
ADDED : டிச 15, 2024 01:17 AM
கரூர், டிச. 15-
கரூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ரேஷன் குறைதீர் கூட்டத்தில், 18 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், மண்மங்கலம், புகழூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை ஆகிய தாலுகாவில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது வினியோக திட்டம் குறித்து ரேஷன் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இங்கு, ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் அட்டை கோருதல், மொபைல் எண் பதிவு, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை தீர்வு செய்து கொள்வதற்காக நடந்தது.
இதன்படி, கரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம் நடந்தது. வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். பொதுமக்கள் சார்பில், 18 மனுக்கள் அளிக்கப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.