/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரேஷன் அரிசி கடத்தல்: டூவீலருடன் வாலிபர் கைது
/
ரேஷன் அரிசி கடத்தல்: டூவீலருடன் வாலிபர் கைது
ADDED : ஆக 28, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன்தினம், வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது டூவீலரில், 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்று வாங்கப்பாளையம் பிள்ளையார் கோவில் பின்புறம் பதுக்கி வைத்திருந்ததாக, வெங்கமேடு சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மோகன் குமார், 38; என் பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், டூவீலர், ரேஷன் அரிசி மூட்டைகளையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.